விடிய விடிய ஆட்சியர் அலுலகத்தில் காத்திருந்த போராட்டக்காரர்கள்…

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 09:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
விடிய விடிய ஆட்சியர் அலுலகத்தில் காத்திருந்த போராட்டக்காரர்கள்…

சுருக்கம்

Alulakat collector protesters waiting at dawn to dawn

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திய விடிய விடிய நடத்தினர்.

தமிழகம் முழுவதும 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

வெற்றுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கடந்த 14–ஆம் தேதி தங்களது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர். எட்டாவது நாளாக தொடர்கிறது இவர்களது போராட்டம்.

தேனியில், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கும் இவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த காத்திருப்புப் போராட்டம், 2–வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. விடிய விடிய நடந்த இந்த காத்திருப்பு போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, விளக்கிப் பேசினர். முழக்கங்களையும் எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Tamil News Live today 19 January 2026: Pandiyan Stores - வாழ்க்கையே போச்சு! வாசலில் வந்து இறங்கிய துணிமணிகள்! நிலைகுலைந்து போன தங்கமயில்!