
கும்பகோணத்தில், புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்டு, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.73 ஆயிரத்து 200 மதிப்புள்ள மதுபாட்டில்கள் காவலாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கியவர் யார்? என்று காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் புது பர்மா நகர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கூரை வீடு கட்டப்பட்டிருக்கிறது என்ற தகவல் கிராம நிர்வாக அதிகாரி அழகுராணிக்கு கிடைத்தது.
அந்த தகவலின்பேரில், அழகுராணி சம்பவ இடத்துக்குச் சென்று ஆக்கிரமித்தாக சொன்ன வீட்டைச் சோதனை செய்தார்.
அப்போது, யாரும் இல்லாத அந்த வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அளித்த தகவலின்பேரில் கலால் பிரிவு தாசில்தார் மனோகரன், வருவாய் ஆய்வாளா் விநாயகம், மது விலக்கு அமல் பிரிவு காவலாளர்கள் முருகானந்தம் ஆகியோர் அந்த வீட்டுக்குச் சென்று, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ரூ.73 ஆயிரத்து 200 மதிப்புள்ள 406 மதுபாட்டில்கள் இருந்ததும், அவை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு, வீட்டில் பதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அழகுராணி புகாரின் அளித்தார். அந்த புகாரின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்தனர்.
மதுபாட்டில்களை கடத்தி கொண்டுவந்து, பதுக்கி வைத்தவர் யார்? என்று விசாரணை தொடர்ந்து வருகிறது.