கார்ப்பரேட் அரசியலில் கைக்கூலிகள் நீங்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளை கிழித்து தொங்க விட்ட மயில் சாமி…….! தொடரும் மக்கள் ஆதரவு…….!

 
Published : May 23, 2018, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
கார்ப்பரேட் அரசியலில் கைக்கூலிகள் நீங்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளை கிழித்து தொங்க விட்ட மயில் சாமி…….! தொடரும் மக்கள் ஆதரவு…….!

சுருக்கம்

Tamil comedy actor raised sensational questions against government

ஜனநாயக நாட்டில் புற்றுநோயிடம் இருந்து, தங்கள் வருங்கால சந்ததியை காத்திட போராடிய மக்களை, துப்பாக்கி முனையில் வென்றிட நினைத்த அரசாங்கத்தால், இன்று 11 அப்பாவி மக்கள் உயிர் பலியாகியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் தமிழக மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட யாருமே இப்படி ஒரு தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். அமைதியான முறையில் மட்டுமே 100 நாள் வாரை போராடிய இவர்களுக்கு, இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

இப்படி ஒரு நிகழ்வுக்கு யார் காரணம்? இப்படி பொது மக்கள் உயிரை பறிக்கும் அதிகாரத்தை அரசுக்கு யார் கொடுத்தது? என அனைத்து ஊடகங்களிலும் இந்த சம்பவம் கூறித்து கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தெரிவித்திருக்கும் வெளிப்படையான கருத்துக்கு, மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.

”நீங்கள் எல்லாம் யாருக்கு தொண்டு ஆற்ற அரசியலுக்கு வந்தீர்கள்?  கார்ப்ரேட் அரசியலில் கைக்கூலிகள் நீங்கள். உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லை ஒரு அரசியல்வாதி என்று சொல்ல, சுடுவதற்கு யார் உங்களுக்கு உரிமை கொடுத்தது? என அவர் எழுப்பியிருக்கும் ஒவ்வொரு கேள்விகளிலும் தமிழக அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார் மயில்சாமி.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!