
தங்கள் வாழ்வை புற்றுநோயிடம் இருந்து பாதுகாக்கப் போராடி, இன்று குண்டடிப்பட்டு பலியாகி இருக்கின்றனர், ஸ்டெர்லைட்டுக்காக போராடிய அப்பாவி மக்கள்.
சொந்த மண்ணில் அவர்களுக்கு நேர்ந்திருக்கும் இந்த அநியாயம், தமிழக மக்களை கொதித்தெழச் செய்திருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசாங்கம் நிகழ்த்தியிருக்கும் இந்த கொடுமையை எதிர்த்து, மனித நேயம் உள்ள அனைத்து தரப்பு மக்களுமே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திரைத்துறை பிரபலமான பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பதிவில் தமிழக அரசை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அதில்” போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பொது மக்களை கொல்லுவதா? தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த வன்முறையை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.
போராட்டக் களத்தில் மக்களின் அழுகுரல் உங்கள் செவியை எட்டவில்லையா? சுற்றுசூழல் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா? இல்லை மத்தியில் இசைக்கும் இசைக்கு தான் கைப்பாவையாக நடனமாடிக் கொண்டிருக்கிறீர்களா? என சரமாரியாக கேள்விக்கனைகளை தொடுத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.