Aided Schools in Tamil Nadu : தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெரு பள்ளிகளில் மட்டும் சுமார் 5500க்கும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசு உதவி பெரும் பள்ளிகள்
தமிழகத்தை பொறுத்தவரை 3,156 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 3904 உயர்நிலைப் பள்ளிகளும், 6500க்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகளும், 24,000 அதிகமான தொடக்கப் பள்ளிகளும் என, மொத்தமாக 35,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க, அரசிடமிருந்து உதவிகளை பெற்று தனியார் மூலம் செயல்படுத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உபரி ஆசியர் பணியிடங்கள்
இப்படி அரசால் செயல்படுத்தப்படும் பல வகையான பள்ளிகள் தமிழகத்தில் இருந்தும், கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தை பொறுத்தவரை அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வது என்பது தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலைதான் அதிகபட்சமான அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் பணிநிரவல் நடத்தப்படுகிறது, அதாவது அந்த அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் உபரி பற்றாக்குறையை கண்டறிந்து, அங்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர். இது தான் வழக்கமான ஒன்று.
மாற்றுவதில் சிக்கல்
அரசு பள்ளிகளை பொறுத்தவரை இந்த ஆசிரியர் மாற்றும் என்பது இயல்பாக உள்ள நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற அந்த பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் பள்ளி நிர்வாகங்கள் பல லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டுதான் ஆசிரியர்களை நியமிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே இந்த சூழலில் வேறு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஏற்றுக் கொண்டால், அந்த பலன்களை இலக்க நேரிடும் என்பதால் அதிக அளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் உதவி பெறும் பள்ளிகள் கூட, புதிய ஆசிரியர்களை நியமிக்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, ஏற்கனவே உபரியாக இருக்கும் ஆசிரியர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
அரசுக்கு நிதி இழப்பு
இப்படி உபரி ஆசிரியர்களை சேர்த்துக்கொண்டே செல்வதலால், தமிழக அளவில் (அரசு உதவி பெரும் பள்ளிகளில்) 5500க்கும் அதிகமான உபரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளதாக குறைப்படுகிறது. இதனால் அரசுக்கு நிதி பெரிய அளவில் வீணாகிறது. அரசு பல முயற்சிகளை இந்த விஷயத்தில் பல கட்ட முடிவுகளை எடுத்து வந்தாலும் தொடர்ந்து இந்த உதவி பெறும் பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களால் அரசுக்கு பெரும் நிதி அழைப்பு ஏற்படுகிறது.
ஆசிரியர்கள் கருத்து என்ன?
இது குறித்து உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கோரிக்கையானது, நாங்கள் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தாலும், ஒரு அரசு ஆசிரியராக தான் கருதப்பட்டு வருகிறோம். ஆண்டுதோறும் தணிக்கையிலும் ஆட்சோபனை வருகிறது. மாற்றுப் பணியில் அரசு பள்ளியில் செயல்படக்கூட எங்களுடைய கல்வி அலுவலர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. இதனால் பல ஆண்டுகளாக உபரி ஆசிரியர்களாக இருக்கும் எங்களை அரசு பள்ளிகளில் உள்ள காலியிடங்களுக்கு மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்று அவர்கள் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.