- Home
- Gallery
- School ReOpen: கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிகள்.. போக்குவரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
School ReOpen: கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிகள்.. போக்குவரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Transport Department
இது தொடர்பாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏற்ப வரும் 9-ம் தேதி 705 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Special Bus
அதேநேரம், வரும் 8, 9 தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு-முகூர்த்தம்) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Students: 1000 ரூபாயை விட்டுடாதீங்க! பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!
Government Bus
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7, 8 தேதிகளில் 1,105 பேருந்துகள் மற்றும் சென்னை,கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
School Reopen
வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் தலா 15 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.