காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க மறுப்பு- கர்நாடகவிற்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்

By Ajmal Khan  |  First Published Sep 21, 2023, 12:33 PM IST

காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்
 


தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா

தமிழகத்திற்கு காவரியில் இருந்து உரிய தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் திறக்க வாய்ப்பில்லையென மறுத்தது. மேலும் கர்நாடக மாநில மக்களுக்கு குடிநீர் தேவைகாக மட்டுமே நீர் இருப்பதாக கூறியது.

Latest Videos

undefined

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால் இதனை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்துள்ளது. இந்தநிலையில்  காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பாக வாதிட்ட போது,  தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது. 

தண்ணீர் திறக்க மறுப்பு

கர்நாடக அணைகளில் இருக்கும் அதிகளவு நீரைக்கூட தர மறுத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.எனவே உச்சநீதிமன்றம் வகுத்துள்ள படி தமிழகத்திற்கு 12500 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது.  இதற்கு பதில் அளித்த கர்நாடக அரசு கர்நாடகவில் மழை பொழிவு குறைந்துள்ளது. நீரின் இருப்பும் குறைவாக உள்ளது. இந்தநிலையில் 5ஆயிரம் கன அடி நீர் திறக்க முடியாது என வாதிடப்பட்டது. மேலும் 2500 கன அடிநீர் மட்டுமே திறக்க முடியும் எனவும் கூறப்பட்டது. 

கர்நாடகவின் கோரிக்கை நிராகரிப்பு

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூறுவது தவறு என்று தெரிவித்த  நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்து அதிரடி உத்தரவிட்டனர். 

இதையும் படியுங்கள்

காவிரி விவகாரம்: கர்நாடக மக்கள் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
 

click me!