
மதுக்கடைகளை விட மனிதர்களின் உயிர் மேலானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ரோத்தகரி, “ 500 தொலைவில் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என்பதை குறைக்க வேண்டும்.நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடினால் 25,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். என்று வாதிட்டார்.
மதுவை விட மனித உயிர் மேலானது
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, மதுக்கடைகளை விட மனித உயிர் மேலானது . நெடுஞ்சாலைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து அதிகரித்துள்ளது. மாநிலத்திற்கான வருவாய் பெருக்குவதற்கு மாற்று வழியை அரசு யோசிக்க வேண்டும். என்று தெரிவித்தார்.