பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்

By Velmurugan sFirst Published Jan 2, 2023, 5:35 PM IST
Highlights

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல் சிலைக்கடத்தல்காரர்களுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாக அதே பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்சா என்பவர் கடந்த 2019 ஏப்ரல் 20 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண் பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

இந்த மனுவை கவனத்தில் எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேல் தொடர்புடைய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஐஜி பொன் மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அப்போது பொன் மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் தொடர்புடைய வழக்கு விவகாரம் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வின் கண்காணிப்பில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சிலை கடத்தல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காதர் பாட்சா தாக்கல் செய்த மனு மீது உரிய வகையில் பரிசீலிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தவறாகும். எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

சபரிமலையில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 8-ந்தேதி வரை முன்பதிவு நிறைவு

இதற்கு காதர்பாட்சா தரப்பில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும், விவகாரத்திற்கும் தொடர்பில்லை. இந்த விவகாரத்தில் மனுதாரர் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இத தொடர்பான உண்மை விவகாரங்களை சிபிஐ விசாரணை மூலம் கண்டறிவது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!