கோவிலில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் மரணம்: முதல்வர் இரங்கல்

By Velmurugan s  |  First Published Jan 2, 2023, 12:56 PM IST

சென்னை பார்த்த சாரதி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கச் சென்ற பத்திரிகையாளர் சீனிவாசன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தின் ஸ்ரீரங்கம், பார்த்தசாரதி கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன்படி சென்னை பார்த்த சாரதி கோவில்லில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை தி இந்து ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞரும், பத்திரிகையாளருமான சீனிவாசன் தனது கேமரா மூலம் பதிவு செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

Vaikuntha Ekadashi 2023: ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். 

இந்நிலையில் பத்திரிகையாளர் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தி இந்து (The Hindu) ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.சீனிவாசன் (வயது 56), இன்று (02.01.2023) அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான  பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 

undefined

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

திரு.கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த திரு.கே.வி. சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!