
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் பகுதியில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்று அமைச்சர் இராஜலெட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சங்கரன்கோவில் நகரில் உள்ள பத்தாவது வார்டிற்கு உள்பட்ட புதுமனை தெருப் பகுதியில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்று அமைச்சர் இராஜலெட்சுமி திடீர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின்போது, அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அங்கு உள்ளவர்களிடம் குடிநீர் விநியோகம் குறித்த குறைகளை கேட்டு அறிந்தார்.
அப்போது பொதுமக்கள், தற்போது 10 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதனை வாரம் ஒருமுறையாக மாற்றி குடிநீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தன்ர். உடனே அமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அப்போது அவருடன், சங்கரன்கோவில் நகரசபை ஆணையாளர் ராஜேந்திரன், கூட்டுறவு விற்பனை நிலைய மாநில துணை தலைவர் கண்ணன், தொகுதி இணை செயலாளர் வேலுச்சாமி, நேர்முக உதவியாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பாசறை செயலாளர் முருகன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சவுந்தர், ராமதுரை, தேவராஜ், நகரசபை மேலாளர் லட்சுமணன், பிட்டர் சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.