
பத்தாம் வகுப்பு தேர்வை பிறமொழி மாணவர்கள் இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. தமிழக அரசின் கட்டாய தமிழ் கற்றல் சட்டப்படி பிறமொழி மாணவர்கள் தமிழில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தங்கள் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை என்றும், தமிழ் ஆசிரியரையும் அரசு நியமிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே மார்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் படித்த பாடத்தை மொழிப் பாடமாக எழுத அனுமதிக்க உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
அதன் பேரில் நீதிபதிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழுக்கு பதில் பிற மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களை கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.