அரசுப் பள்ளியை அழகுறச் செய்த அருமை ஓவியர் !! வைரலாகும் புகைப்படங்கள் !!

Published : Jun 04, 2019, 10:52 PM IST
அரசுப் பள்ளியை அழகுறச் செய்த அருமை ஓவியர் !! வைரலாகும் புகைப்படங்கள் !!

சுருக்கம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஓர் உண்டு உறைவிடப்பள்ளியை  ஓவியர் ஒருவர் தனது கை வண்ணத்தில் ஜொலிக்கச் செய்துள்ளார். பள்ளியை தனது ஓவியத் திறமையால் அழகூட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

கிட்டத்தட்ட இரண்டு மாத விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் அதி உற்சாகத்துடன்  பள்ளிக்கு சென்றனர். பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் புத்தம் புது வண்ணம் பூசப்பட்டிருந்தன.

அழகான வகுப்பறைகள், சூப்பர் கரும்பலகைகள், புத்தம் புது யூனிபார்ம்கள் என மாணவ-மாணவிகளும் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளி புத்தம் புது  வண்ணத்தில் ஜொலிக்கிறது. ஓவியர் தங்கதுரை என்பவர் முழு பொறுப்பெடுத்து அந்தப்பள்ளியில் வண்ணம் தீட்டியுள்ளார்.

வகுப்பறைகளில் பழங்கள், கற்பதற்கு ஏழ்மை ஒரு தடையல்ல என வாசகங்கள் அடங்கிய பெயிண்ட்கள் என ஜொலிக்கிறது. இதே போல் ரயில் பெட்டிகள் போன்று வகுப்பறை ஓவியங்கள் என ஓவியர் தங்கதுரை அசத்தியுள்ளார்.

இந்த ஓவியரின் கை வண்ணத்தில் உருவான அற்புதமான ஓவியம் அங்கிருந்தவர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது. அது மட்டுமல்ல மாணவ-மாணவிகளும் அதிக உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்தனர்.

PREV
click me!

Recommended Stories

டோட்டல் காலி..! சென்னை குலுங்கவில்லை.. காலை வாரிய ஜிகே மணி.. அன்புமணி தான் டாப்
தூத்துக்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படாது.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரம்!