பிறை தெரிந்தது ! தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான்… தலைமை ஹாஜி அறிவிப்பு !!

Published : Jun 04, 2019, 09:47 PM IST
பிறை தெரிந்தது ! தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான்… தலைமை ஹாஜி அறிவிப்பு !!

சுருக்கம்

தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இன்று மாலை பிறை தெரிந்ததையடுத்து தலைமை ஹாஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின்  முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் இப்பண்டிகை சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும்.. கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர்.

இந்நிலையில்  இன்று மாலை பிறை தெரிந்ததால்  தமிழகம், புதுச்சேரியில்  ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும்  என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.  

தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை,லால்பேட்டையில் பிறை தென்பட்டது என்று தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார். இதையடுத்து நாளை இஸ்லாமியர்கள் புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ராகுல் காந்தி போராட்டத்திற்கு தடைகளா? – மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜமோகன்!
Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!