அதிர்ச்சி!! குற்றாலத்தில் கடன் பிரச்சனை காரணமாக தந்தையும் மகளும் தற்கொலை.. தாய் கவலைக்கிடம்..

By Thanalakshmi V  |  First Published Sep 4, 2022, 4:00 PM IST

குற்றாலத்தில் தனியார் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில், தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி நுழைவு வாசல் எதிரே அமைந்துள்ள தனியார் விடுதியில், கடந்த 30 ஆம் தேதி மதுரையை சேர்ந்த மகாலிங்கம் என்பவர், தனது மனைவி காமாட்சி, மகள் தனபிரியாவுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்காமல் பூட்டியே கிடந்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து தூர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து விடுதியின் உரிமையாளர் அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது கணவர் மகாலிங்கம், மகள் தனபிரியா ஆகிய இருவரும் கட்டிலில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். மனைவில் காமாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:சிறுநீர் கழிக்கும் போது ஏற்பட்ட வயிற்று வலி.. ஆணுறுப்பை வெட்டிய அதிர்ச்சி சம்பவம் !

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காமாட்சியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இருவரின் உடலை, உடல் கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர். 

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த குற்றால போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மகாலிங்கமும் மகளும் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ள இந்த சமயத்தில், தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க:பொது இடங்களில் Prank வீடியோ செய்ய தடை..! யூடியூப் சேனல்களுக்கு செக் வைத்த காவல்துறை

click me!