சூப்பர் செய்தி!! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. நாளை முதலமைச்சர் தொடங்கி வைப்பு..

By Thanalakshmi V  |  First Published Sep 4, 2022, 2:14 PM IST

தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டதிற்கு மாற்றாக உயர்கல்வி உறுதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 


தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டதிற்கு மாற்றாக உயர்கல்வி உறுதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வி (பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு) இடைநிற்றல் தவிர்க்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, வங்கிக் கணக்கில் ஒவ்வொரும் மாதமும் 7ஆம் தேதி நேரடியாக செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

மேலும் படிக்க:தமிழகத்தில் கனமழை.. இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்

இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என கணக்கிடப்பட்டுள்ளது.  இத்திடத்திற்கு தகுதியுடைய மாணவிகள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த ஜுன் மாதம் 25 ஆம் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி, ஜூலை 10 ஆம் தேதி வரை பெறப்பட்டன.  

மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள், பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள், மாணவிகள் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய விவரங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், ஆசிரியர் தினமான நாளை செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.

மேலும் படிக்க:பொது இடங்களில் Prank வீடியோ செய்ய தடை..! யூடியூப் சேனல்களுக்கு செக் வைத்த காவல்துறை

சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி விழாவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இவ்விழாவில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்புரை ஆற்றுகிறார்.

click me!