நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லையா.? காரணம் என்ன.? வெளியான தகவல்
அதில், இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. மனுததாரர் கூறும்படி எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், சீமானின் மனு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சினிமா பாணியில் கார் மீது வெடிகுண்டு வீச்சு.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன்!
இதை எதிர்த்து சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வழங்கக்கூடாது? என்பதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் 25ம் தேதிக்கு பிறகு மீண்டும் பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.