அதிமுக முன்னாள் எம்பியை திமுகவிற்கு தட்டி தூக்கிய ஸ்டாலின்.! யார் இந்த பு.தா.இளங்கோவன்.?

By Ajmal Khan  |  First Published Mar 15, 2024, 12:33 PM IST

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் எம்பி பு.தா. இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன் இன்று இணைந்தனர்.


அணி மாறும் தலைவர்கள்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கும், கூட்டணியில் இருந்து விலகி எதிர் கூட்டணிக்கும் இணையும் நிகழ்வு நாள் தோறும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் தங்கள் கட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் காட்சி தாவும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த தின தினங்களாக தமிழகத்தில் பங்வேறு முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.

Latest Videos

திமுகவில் இணைந்த அதிமுக எம்பி

இந்தநிலையில் பாமக மற்றும் அதிமுகவில் நீண்ட காலமாக கட்சி பணி ஆற்றி வந்த பு,தா இளங்கோவன் திமுகவில் இணைந்துள்ளார். 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர் பு.தா. இளங்கோவன்,  பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்த பு.தா.இளங்கோவன் இன்று  திமுக தலைவரும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். அதிமுகவை சேர்ந்த விருதாச்சலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலைச் செல்வனும் இன்று திமுகவில் இணைந்தார்.  மேலும் கடலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த மாற்று கட்சியை சேர்ந்த  800 பேரும்  திமுகவில் இணைத்துக்கொண்டு்ள்ளனர்.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லையா.? காரணம் என்ன.? வெளியான தகவல்

click me!