
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில், போக்குவரத்துப் பணியாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களின் தொழிற்சங்க நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
அரசு அறிவித்துள்ல 2.40 காரணி ஊதிய உயர்வுக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதை அடுத்து, சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மட்டுமல்லாது, புறநகரிலும் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் ஆகிய இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி முடிவு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில் இந்த திடீர் வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேட்டில் பஸ்கள் இயக்காமல் நிறுத்தப் பட்டிருப்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். பேச்சு வார்த்தையில் இழுபறி காரணமாக திடீரென்று சில இடங்களில் பஸ் இயக்கப் படாமல் உள்ளன. பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், அலுவலகம் முடிந்து செல்லும் ஊழியர்கள் அவதி அடைந்தனர்.
முன்னதாக, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் என்றும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 2 புள்ளி நான்கு பூஜ்ஜியம் மடங்கு உயர்த்திக் கொடுப்பதற்கும் அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்று வருகிறது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் என அரசு தரப்பு கூறியுள்ளது.
2.40 மடங்கு ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. அரசு தரப்பு ஒப்புதல் குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தின,