
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடிவு செய்து அறிவித்தது முதற்கொண்டு தற்போது வரை பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள்,முக்கிய புள்ளிகள் என அனைவரும் ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதன்படி,
ரஜினி காந்த் அவர்களின் அரசியல் குறித்த அறிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும், சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும்,கடந்த 25 ஆண்டுகாலமாக ஆதரவு கொடுத்து வரும் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் ரஹ்மான் தெரிவித்தார்
மேலும், அரசியலை பொறுத்தவரை, ரஜினிகாந்த அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பின்னாளில் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
இதிலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் அவர்களும் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என சிந்திக்க வைக்கும்.
பல தலைவர்கள் ரஜினிக்கு தொடர்ந்து வாழ்த்து கூறி வந்த நிலையில், நான்கு நாள் களைத்து இன்று ரஹ்மான் அவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.