சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்...! மீண்டும் உருவெடுக்கிறது போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்...!

 
Published : Jan 04, 2018, 06:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்...! மீண்டும் உருவெடுக்கிறது போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்...!

சுருக்கம்

Government buses suddenly stop at Chennai suburbs

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மாநிலம் முழுவதும் 1.43 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20, 700 ஆக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன. 

இதுகுறித்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 

இதில் தமிழக அரசு சார்பில் மூன்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 2.57% ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 2.44 ஊதிய உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒருமுறை பேச்சு நடத்தலாம் 2.37 % ஊதிய உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு பேச்சு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த மூன்று யோசனைகளில் ஒன்றை முடிவு செய்வது பற்றி தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. 

இதைதொடர்ந்து போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் இன்று அமைச்சருடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சென்னை குரோம்பேட்டையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் 46 தொழிற்சங்கங்கள் பங்கேற்றது. பேச்சுவார்த்தையில் இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அரசு பேருந்து திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!