
அமெரிக்காவில் உள்ள கேசினோவில் ரஜினி காந்த் உள்ள புகைப்படம் குறித்து, பாஜக மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில், கேசினோவில் ரஜினிகாந்த் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென அமெரிக்கா புறப்பட்டார். ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கேசினோவில் விளையாடும் புகைப்படும் ஒன்று டுவிட்டரில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவது குறித்து பல்வேறு கருத்துகளை உலவுகின்றன. ரஜினிகாந்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.
இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி, தனது உடல் நலத்தை அமெரிக்க கேசினோவில் மேம்படுத்தும் ரஜினிகாந்த் என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது சொத்துக்கள் எங்கிருந்து வந்தது என்று அமலாக்கத்துறை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதில் சு.சுவாமி கூறியுள்ளார்.