கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திரா காந்தி பணம் கொடுத்தார்… சு,சுவாமி புதிய குண்டு

 
Published : Mar 14, 2017, 07:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திரா காந்தி பணம் கொடுத்தார்… சு,சுவாமி புதிய குண்டு

சுருக்கம்

subramaniasamy press meet

கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திரா காந்தி பணம் கொடுத்தார்… சு,சுவாமி புதிய குண்டு

இலங்கைக்கு கச்சத்தீவை, தாரை வார்ப்பதற்காக, திமுக தலைவர் கருணாநிதிக்கு, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி பணம் கொடுத்தார் என்று பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பகீர் குற்றம் சாட்டிஉள்ளார்.

சர்வதேச கடல் புரிந்துணர்தல் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் இலங்கையும் தமது சர்வதேச கடல் எல்லையை 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கிக் கொண்டன. அதுவரை தமிழக மீனவர்களின் பயன்பாட்டில் இருந்த கச்சத்தீவு இலங்கையின் கைக்குச் சென்றது. இந்த ஒப்பந்தத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி கையெழுத்திட்டார்.

இந்நிலையில் வங்கக்கடலில்  கச்சத்தீவை ஒட்டிய கடல்பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. கச்சத்தீவை தாரை வார்த்ததால்தான் இப்பிரச்சனை தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கச்சத்தீவை தாரை வார்ப்பதற்காக, கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார் என்று குற்றம் சாட்டினார்.

இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம்செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி யோசனை தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?