
சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அசோக்குமார். இவர் சென்னை கண்ணிகாபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதைதொடர்ந்து அசோக்குமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதையத்து, நேற்று இரவு பணி முடித்துவிட்டு இன்று காலை வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அசோக்குமார் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்த மண்ணெண்னையை தலையில் ஊற்றி பற்ற வைத்து கொண்டார்.
இதையறிந்த உறவினர்கள் அசோக்குமாரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். ஆனால் அவருக்கு 60 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டன.
இதைதொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் அசோக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.