நீட் தேர்வு விவகாரம் - மாணவ மாணவிகள் ஸ்டாலினுடன் சந்திப்பு...!!!

 
Published : Jul 17, 2017, 07:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
நீட் தேர்வு விவகாரம் - மாணவ மாணவிகள் ஸ்டாலினுடன் சந்திப்பு...!!!

சுருக்கம்

Students requested the opposition leader Stalin to pressure the government to cancel the selection process.

நீட் தேர்வை ரத்து செய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின்படி படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஓர் அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நீட் தேர்வை ரத்து செய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

  

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!