மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்து விவகாரம் - கேவியட் மனுதாக்கல்...

 
Published : Jul 17, 2017, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்து விவகாரம் - கேவியட் மனுதாக்கல்...

சுருக்கம்

The Tamil Nadu Government has appealed to the High Court against 85 per cent reservation in medical study. This is followed by the Kavity petition.

மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனைதொடர்ந்து கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவபடிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தஞ்சை சிபிஎஸ்சி மாணவர் தர்னீஸ் குமார் தாயார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழக எதிர்கட்சிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும், அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து சிபிஎஸ்இ மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் இருதரப்பையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்க கூடாது என தெரிவித்துள்ளனர்.  

 

 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!