தடையை மீறி 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்கள் - பெல்ஸ் ரோட்டில் பரபரப்பு!!

First Published Jun 16, 2017, 11:48 AM IST
Highlights
students celebrating bus day in bells road


சென்னையில் பெல்ஸ் ரோட்டில் மாணவர்கள் பஸ் கொண்டாடினர். உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இன்று பஸ் டே கொண்டாடியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சென்னையில், மாணவர்கள் பேருந்துகளை உடைப்பது என்பது ஒரு காலத்தில் அடிக்கடி நிகழும் சம்பவமாக இருந்தது. 

ஆனால், பஸ் டே மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கோஷ்டி மோதல் உள்ளிட்ட காரணங்களால், பேருந்துகள் உடைக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.சுதன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை மாநகரில் மாணவர்கள் பஸ்டே கொண்டாடி வருகின்றனர். இதனால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை நகரில் பஸ் டே நடத்த மாணவர்களுக்கு தடை விதித்தனர்.

இந்த நிலையில், சென்னை பெல்ஸ் சாலையில் மாணவர்கள் பஸ்டே கொண்டாடியுள்ளனர்.

பஸ் டே கொண்டாட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மாணவர்கள் இன்று பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து, அந்த பகுதில் காவல் துறையினர் விரைந்து சென்றனர். மேலும், பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!