வேலூர் சிறையில் திடீர் போராட்டத்தில் குதித்த நளினி… புழலுக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம்!!

 
Published : Jun 16, 2017, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
வேலூர் சிறையில் திடீர் போராட்டத்தில் குதித்த நளினி… புழலுக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம்!!

சுருக்கம்

nalini hunger strike in vellore prison

வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தத நளினி தனது மனுவை விசாரிக்க கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினியின் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்  வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்றும் இது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும்  தனது பாதுகாப்பு கருதி தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார் நளினி.

ஆனால் நீண்ட நாட்களாக இந்த மனு மீதான விசாரணை நடைபெறாமல் உள்ளது. இதையடுத்து வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை புழல் சிறைக்கு மாற்றினால் மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!