மாணவியை பலாத்காரம் செய்த 12 பேர் கொண்ட கும்பல் - தடுத்த நண்பனையே அடித்து கொன்ற கொடுரம்!!

Asianet News Tamil  
Published : Jun 16, 2017, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
மாணவியை பலாத்காரம் செய்த 12 பேர் கொண்ட கும்பல் - தடுத்த நண்பனையே அடித்து கொன்ற கொடுரம்!!

சுருக்கம்

law college student gang raped by 12

தர்மபுரியில் சட்ட கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 12 பேர் கொண்ட கும்பலிடமிருந்து மீட்க சென்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கடந்த திங்கள் அன்று அதியமான்கோட்டை அடுத்துள்ள வடகத்தூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்திகா கோவை சட்டகல்லூரி மாணவி. இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு அழைப்பிதல் கொடுக்க தனது மாமன் மகன் இரஞ்சித்துடன் டூவிலரில் தர்மபுரி அடுத்துள்ள பதிகால்பள்ளம் வனப்பகுதியில் சென்றபோது வனப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த 12 பேர் கொண்ட கும்பல் டூவிலரை மடக்கி ரஞ்சித்தை அடித்து கிழே தள்ளிவிட்டு கீர்த்திகாவை வனப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

12 பேர் கொண்ட கும்பலில் இருந்த நண்பன் மணிகண்டன் என்பவன் இதெல்லாம் தவறு வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தபோது. மணிகண்டனை உடன் இருந்தவர்களே அடித்து கொன்று விட்டு அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லையில் உடலை வீசி சென்றுள்ளனர்.

பலாத்காரம் செய்யப்பட்ட  சட்ட கல்லூரி மாணவி கீர்த்தி பலத்த காயங்களுடன் வனப்பகுதியில் கிடந்தார். அவரை காப்பாற்றிய பக்கத்து கிராம மக்கள் தர்மபுரி மருத்துவமனை கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி நகர போலீசார் விமல் பார்த்திபன், ஆனந்த், சூரி, உள்ளிட்ட 5 பேரை செய்து கைது செய்துள்ளனர். 

அதேபோல  மணிகண்டனை கொன்ற வேளாங்கண்ணி உள்பட 2 பேர் மீது அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  கைது செய்துள்ளனர். கற்பழிப்பு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேர் கொண்ட குற்றவாளிகளில் 7 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்

PREV
click me!

Recommended Stories

தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர் ! மா.சுப்பிரமணியன் பேட்டி
47 வயதில் கள்ளக்காதல்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி.. கதையை முடித்த ராஜமாணிக்கம்! அதிர்ச்சி தகவல்