
ஈரோடு
ஈரோடு டாஸ்மாக் சாராயக் கடையில் கூடுதல் விலைக்கு சாராயம் விற்கப்பட்டதால் குடிகாரர்களுக்கும், சாராயக் கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், தற்போது 80 டாஸ்மாக் சாராயக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சாராயக் கடை சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. எதிரில் உள்ளது. இந்த கடையில் சாராயம் குறிப்பிட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று நேற்று குடிகாரர்கள் புகார் கொடுத்தனர்.
ஒருசிலர் இதுதொடர்பாக டாஸ்மாக் சாராயக் கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த குடிகாரர் மணிகண்டன் கூறியது:
“ஈரோட்டில் திடீரென்று டாஸ்மாக் சாராயக் கடைகள் பலவற்றை அடைத்துவிட்டதால் ஒருசில இடங்களில் மட்டுமே கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளுக்கு கூட்டம் அதிகமாக வருவதால் சாராயம் மற்றும் பீர் வகைகளை கூடுதல் விலையில் விற்பனை செய்கிறார்கள். சராசரியாக ரூ.10 வரை விலை உயர்வாக விற்பதால் குடிகாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்” என்று அவர் கூறினார்.
இதுபோல் பலரும் புகார்கள் தெரிவித்ததுடன் விற்பனையாளர்களிடமும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தகராறு செய்தவர்களிடம் சாராய பாட்டிலில் குறிப்பிட்டு இருந்த விலை மட்டுமே பெற்றனர். இதனால் குடிகாரர்கள் பிரச்சனையை கைவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.