தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகப்போறீங்களா ? நாளை மறுநாள் தொடங்குகிறது சிறப்பு ரயில் முன்பதிவு…

Asianet News Tamil  
Published : Jun 16, 2017, 08:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகப்போறீங்களா ? நாளை மறுநாள் தொடங்குகிறது சிறப்பு ரயில் முன்பதிவு…

சுருக்கம்

Deepavali special train reservation

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்த தீபாவளிக்கான  சிறப்பு ரயில் முன்பதிவு நாளை  மறுநாள் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் லட்சக்கணக்கான வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊரை விட்டு விரிந்து வசித்து வருகின்றனர். அரசு பணிகள், தனியார் நிறுவனத்தில் பணிகள், மாணவர்கள் சென்னையில் உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் நாட்களில்  சொந்த ஊருக்குச் செல்ல ரயில்வே ஸ்டேஷன்  மற்றும் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்துச் செல்வர்.

இதுதவிர, விழாக்காலக் கூட்ட நெரிசல்களைப் பயன்படுத்தி, ஏராளமான தனியார் வாகனங்கள் அதிகக் கட்டணங்களை வசூலித்து வருகின்றன இது போன்ற சமயங்களில் ஒவ்வொரு  ஆண்டும்  தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் விடப்படுகின்றன.

மேலும் கூடுதலாக தெற்கு ரயில்பே சார்பில் சிறப்பு ரயில்களை இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தாண்டுக்கான தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தேதியை, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வருகிற ஜூன் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அறிவிக்கப்பட்ட தேதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள், அவை இயக்கப்படும் நேரம் போன்ற  விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் கூட்டணியில் விசிக இருக்காது.. திருமாவளவன் திட்டவட்டம்.. திமுகவுக்கு தலைவலி!
எங்களுக்கும் தன்மானம் உண்டு.. திருப்பி அடிப்போம்.. திமுகவை விடாமல் துரத்தும் மாணிக்கம் தாகூர்!