அடிப்படை வசதி இல்லாத 5 மருத்துவ கல்லூரிகளுக்கு தடை : மத்திய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

First Published Jun 16, 2017, 11:30 AM IST
Highlights
health ministry ban 5 medical colleges


தமிழகத்தில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4 கல்லூரிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்காவதாக மேலும் 1 மருத்துவக் கல்லூரிக்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 6,850 மருத்துவப் படிப்புக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சிலவற்றில் போதிய உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ படிப்புக்கு தேவையான உபகரணங்கள், பயிற்றுனர்கள் இல்லாமல் செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. 

இந்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், இந்திய மருத்துவ கல்வி கவுன்சில் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை கண்டறியப்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் அளித்த விளக்கத்தை ஏற்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்க மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி மருத்துவ கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த வகையில், தண்டலம் மாதா மருத்துவ கல்லூரி, காஞ்சிபுரம் அன்னை மருத்துவ கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதை அடுத்து மத்திய சுகாதாரததுறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. மருத்துவ கல்லூரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ படிப்பு இடங்கள் மேலும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

click me!