ஓவர் ஸ்பீட்.! பைக்கை பறித்த போலீஸ்- மாணவர் எடுத்த விபரீத முடிவு- மேட்டூரில் அதிர்ச்சி

Published : Feb 27, 2025, 07:48 AM IST
ஓவர் ஸ்பீட்.! பைக்கை பறித்த போலீஸ்- மாணவர் எடுத்த விபரீத முடிவு- மேட்டூரில் அதிர்ச்சி

சுருக்கம்

மேட்டூரில் பைக் பறிமுதல் செய்யப்பட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நடத்திய வாகன சோதனையில் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக் ரேஸில் இளைஞர்கள்

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பைக்கில் சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பைக் ரேஸ் நடத்துவது, வீலிங் செய்வது என மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் போலீசார் தொடர் வாகன சோதனை நடத்தி ஓவர் ஸ்பீட், போதையில் வாகன ஓட்டுபவர்களை தடுத்து நிறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மேட்டூரில் கல்லூரி மாணவர் 3 பேரோடு பைக்கில் வந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ளார். இதனையடுத்து பைக்கை போலீசார் பறிமுதல் செய்தததால் அந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

3 பேரோடு பைக் பயணம்

மேட்டூர் அருகே நங்கவள்ளி,குட்டி கரட்டூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவகுமார் என்பவரின் மகன் பிரவீன்(19) நேற்று தனது நண்பர்களான ரமேஷ,பாலமுருகன்ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வனவாசியில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நங்கவள்ளி என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த பிரவீன் அச்சம் அடைந்து இரு சக்கர் வாகனத்தை திடீரென திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 3 பேரும் கீழே விழுந்துள்ளனர். 

பைக் பறிமுதல்- இளைஞர் தற்கொலை

அந்த இளைசர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பிரவீன் ஓட்டிச் வந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை தருமாறு போலீசாரிடம் பிரவீன் போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் பைக்கை  தர போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த பிரவீன் வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!