
கிருஷ்ணகிரியில் வழி தப்பி ஊருக்குள் வந்த மானை, நாய்கள் விரட்டியதில் கீழே விழ்ந்தௌ மூக்கில் அடிப்பட்ட மானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டு பகுதியிருந்து அகரம் முருகன் கோவில் என்ற இடத்திற்குள் புள்ளி மான் ஒன்று வழி தப்பி ஊருக்குள் நூழைந்தது.
மானைக் கண்ட அந்த ஊரில் இருக்கும் நாய்கள் சத்தம்போட்டு குரைத்தது. பின்னர், நாய்கள் அந்த கடிக்க நெருங்கியது. இதனை உணர்ந்த மான் அங்கிருந்து தப்பிக்க விரைந்து ஓடியது. நாய்களும் அந்த மானை விடாமல் துரத்தியது.
ஒருகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாத அந்த மான் பாறை ஒன்றின் மீது ஏரியது. கால் இடறி அங்கிருந்து கீழே விழுந்ததில் அந்த மானுக்கு மூக்குப் பகுதியில் அடிபட்டது.
இதை அறிந்த கிராம மக்கள் நாய்களிடமிருந்து, அந்த மானைக் காப்பற்றினர்.
பின்னர் வனத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த வனத்துறையினர் அதை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அந்த மானுக்கு சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.