மாணவனின் கழுத்தை அறுத்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்…

 
Published : Nov 12, 2016, 03:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
மாணவனின் கழுத்தை அறுத்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்…

சுருக்கம்

திருப்பூரில் மாணவனின் கழுத்தை அறுத்தை மர்ம நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள்ள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத நபர்களால் மாணவர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து விட்டு காவல் நிலையத்திற்கும், 108 ஆம்புலன்சுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தனர்.

தகவலரிந்து வந்த காவல்துறையினர் அந்த மாணவனை திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்டு ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று காவல்துறையினர் ஆராய்ந்தனர்.

பின்னர் மாணவனின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து அலறி அடித்துக் கொண்டு வந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர், மாணவனின் கழுத்தை அறுத்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் அங்கேயே சாலை மறியல் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களை நிச்சயம் கண்டுபிடித்து கைது செய்வோம் என்று உறுதியளித்த பின்பு உறவினர்கள் அங்கிருந்து கலைந்து மருத்துவமனைக்குச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!