ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறைவேற்றாத பொன்.ராவை கண்டித்து ஆர்ப்பாட்டம் - காங்கிரசார் முடிவு…

 
Published : Jul 03, 2017, 08:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறைவேற்றாத பொன்.ராவை கண்டித்து ஆர்ப்பாட்டம் - காங்கிரசார் முடிவு…

சுருக்கம்

struggle held against pon.ra - congress decided

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் இதுவரை அதனை நிறைவேற்றாத மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என காங்கிரசார் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரசு கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கண்ணாட்டுவிளை பாலையா, அசோகன் சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், “ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் பேர் கண்தானம் செய்வது,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது,

நூறு இடங்களில் காங்கிரசு கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது,

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தருவதாக வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்ததும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் யூசுப்கான், தனபால், காலபெருமாள், முருகேசன், அலெக்ஸ், தங்கம் நடேசன், ஏ.எம்.டி.செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது