டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் கடத்தல்; கையும் களவுமாக பிடித்த வருவாய்த் துறையினர்...

 
Published : Dec 11, 2017, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் கடத்தல்; கையும் களவுமாக பிடித்த வருவாய்த் துறையினர்...

சுருக்கம்

Stealth sand smuggling on tractor

நீலகிரி

நீலகிரியில் டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் கடத்தியதை கண்டுபிடித்த வருவாய்த்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம், அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மணல் கடத்தப்படுவது அதிகமாக நடந்து வருகிறது என்ற தகவல் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு  கிடைத்தது.

அதன்படி, அந்தியூர் வட்டாட்சியர் செல்லையா தலைமையில் வருவாய்த் துறையினர் அந்தியூர், புதுப்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை திடிரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதில் இல்லாமல் டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் கடத்திச் செல்வதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் டிராக்டர் ஓட்டிவந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், டிராக்டர் எண்ணமங்கலம், விராலிக்காட்டூரைச் சேர்ந்த செந்தில்குமாருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை வருவாய்த்துறையினர்  பறிமுதல் செய்தனர். மேலும், அபராதம் விதிக்கவும் கோபி கோட்டாட்சியருக்கு வருவாய்த்துறையினர் பரிந்துரைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!