பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி திமுக பெற்றதை விடவும் குறைவு தான் - அண்ணாமலை விளக்கம்

By Velmurugan s  |  First Published Mar 15, 2024, 7:49 PM IST

மாநில கட்சிகளோடு ஒப்பிடுகையில் 18 மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக சராசரியை காட்டிலும் குறைவாகவே தேர்தல் பத்திரம் மூலம் நிதியை பெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ஐந்து ரூபாய்க்கும், சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் வரைக்கும் குறைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் முதலில் தமிழக அரசையும், திமுக அரசையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என நினைத்தால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு செல்லலாமே. முதலமைச்சர் ஸ்டாலின் செய்தித்தாள் கூட படிப்பதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிஏஏ என்றால் என்ன என்பது கூட முதல்வருக்கு தெரியவில்லை. 35 பக்கங்கள் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பை மாநில அரசுகள்  படித்து முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Latest Videos

6ம் வகுப்பு மாணவியின் ஆடையை கிழித்து அத்துமீறிய தலைமை ஆசிரியர்? சிவகங்கையில் பரபரப்பு

தேர்தல் பத்திரத்தில் யார் அதிக அளவில் முதலீடு பெற்றுள்ளார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியை தாண்டாத ஒரு கட்சி திமுக. அவர்கள் 600 கோடி வாங்கியுள்ளார்கள். பாஜக 19 மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. ஒப்பிட்டுப் பாருங்கள் சராசரியை விட குறைவாகத்தான் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மதரீதியான உணர்வு மிக்க நகரம்; பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது - காவல்துறை விளக்கம்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு வலது கரமாக  ஆதவ் அர்ஜுனன் செயல்பட்டு வருகிறார். இவர் லாட்டரி மார்டின் மருமகன். தேர்தல் பத்திரங்களை பெருமளவு வழங்கியது லாட்டரி மார்டின். விசிக மற்றும் திமுகவுக்கு பெருமளவு நிதி உதவி இவர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியை தடுக்க திமுக அரசு முயன்றது. ஆனால் நீதிமன்றம் பாஜகவிற்கு வாகன பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. உறுதியாக கன்னியாகுமரியில் தாமரை மலரும். மற்ற தொகுதிகளிலும் தாமரை மலர்ந்தே தீரும் என குறிப்பிட்டார்.

click me!