இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் No1..! 11.9% இரட்டை இலக்க சாதனை.. முதலமைச்சர் ஸ்டாலின்

Published : Aug 06, 2025, 10:46 AM IST
mk stalin

சுருக்கம்

தமிழக அரசின் பொருளாதாரம் வேகமாக வளரும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. 11.19% வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது, இது 2010-11 க்குப் பிறகு முதல் முறை.

Tamil Nadu economic growth : தமிழக அரசு பல்வேறு தொழில் முதலீடுகள் ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மூலம் தொழில் முதலீடுகள் ஈர்ப்பு என அசத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட பொருளாதாரத்திற்கான புள்ளி விவரப் பட்டியலில் தமிழக அரசின் பொருளாதாரம் வேகமாக வளரும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

 இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…

2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம்

அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது! இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி! 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666) என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
நான் ஒரு பயங்கரமான ஆஃப் ஸ்பின்னர்.. விளையாட்டு வீரர்களுடன் சில்லாக வைப் செய்த முதல்வர் ஸ்டாலின்