
Stalin questions central government : மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் GST சீர்திருத்தம் COOPERATIVE FEDERALISM என்பது வெற்று முழக்கமா? NEP, இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா? உ.பி, குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்?
புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்? மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர ஏன் இவ்வளவு தாமதம்? தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே? என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 10 கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்பியிருந்தார்.
இந்த பதிவை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன் என அவரும் கேள்விகளை பட்டியலிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.