அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளா
மக்களின் முக்கிய பிரச்சனைகள் என்ன.?
நாடாளுமன்ற தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் மத்திய பாஜக அரசின் திட்டங்களை விமர்சித்து பிரசாரத்தை இந்தியா கூட்டணி கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், புகழ்பெற்ற LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
புகழ்பெற்ற ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில்,
27% பேர் -தான் முக்கியப் பிரச்சினை என்றும்,
23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,
55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்… pic.twitter.com/q6Ss80u5P6
Countdown ஆரம்பம் ஆகிவிட்டது
அதில், 27% பேர் வேலைவாய்ப்பின்மைதான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது.
அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
திடீரென பாரசூட்டில் பறந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்... என்ன காரணம் தெரியுமா.?