திடீரென பாரசூட்டில் பறந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்... என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Apr 12, 2024, 11:05 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவிற்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பாரா செய்லிங்  செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


வாக்காளர் விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பாக வாக்குப்பதிவிற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாக்குசாவடி மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல், இவிஎம் இயந்திரங்களை சரிசெய்தல், வேட்பாளர்களுக்கான சின்னங்களை அச்சடித்து வாக்குப்பதிவி இயந்திரத்தில் பொறுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் வாக்குப்பதிவின் அவசியத்தையும் எடுத்துரைத்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவானது 60 முதல் 70 சதவிகிதம் மட்டுமே நடைபெறுகிறது. எனவே இந்த முறை 100% வாக்குபதிவு என்ற இலக்கை நோக்கி தேர்தல் ஆணையம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest Videos

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேர்மையான மற்றும் 100% வாக்குப்பதிவிற்கு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்சியை நடத்தி வருகிறது. இந்தநிலையில், திருவான்மியூர் கடற்கரையில் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தினை வலியுறுத்தி நடைபெறும் பாரா செய்லிங் ( Para Sailing) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாரா செய்லிங் செய்த சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் கூறுகையில், 100% வாக்குப்பதிவு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாரா செய்லிங் செய்ததாக கூறினார்.  சென்னையில் 35 வாக்குச்சாவடியில் 40% குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

வாக்குப்பதிவு குறைவுக்கு காரணம் என்ன.?

குடிசை பகுதி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடங்களில் குறைவான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாகவும், மேலும் தியாகராயநகர், பாண்டி பஜார் போன்ற இடங்களிலும் 40% குறைவான வாக்கு பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். வேறு இடத்திற்கு பணிக்கு செல்வதால் அந்த பகுதியில் வாக்கு பதிவானது குறைந்து உள்ளது. அரசு ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது அந்த பகுதிகளிலும் வாக்கு பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 

click me!