நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது- ஸ்டாலின் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Apr 14, 2024, 1:40 PM IST
Highlights

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவை எதிர்த்து களம் இறங்குகிறது. இந்தநிலையில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என முக்கிய அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றார் இதுவே இந்தியாவில் நடைபெறும் கடைசி தேர்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 

கோரப்பசியோடு பாஜக

இந்தநிலையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதவில், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை! பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது! நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது! சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜக தலைவராக ஓபிஎஸ்ஸும், பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் விரைவில் நியமிக்கப்படுவார்கள்- ஜெயக்குமார் அதிரடி

click me!