Latest Videos

Stalin Vs Eps : வீண் விளம்பரத்தை தேடுவதிலையே அதிமுக முனைப்பு.! இபிஸ்க்கு எதிராக இறங்கி அடிக்கும் ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Jun 26, 2024, 11:16 AM IST
Highlights

மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

சட்டசபையில் அதிமுக அமளி- வெளியேற்றம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில்  தமிழக சட்டசபையில் அதிமுக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்றைய தினம் சட்டப்பேரவை தொடங்கியது கேள்விநேரத்தின் போது கள்ளக்குறிச்சி விவகாரத்தை பேச வற்புறுத்தி அதிமுக அமளியில் ஈடுபட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்த பின்னர் விவாதிக்க தயார் என கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அதிமுகவினர் சபாநாயர் இருக்கை முன்பு தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து அவைக்காவலர்களால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன்.  

Governor Ravi : திமுக அரசு மீது இபிஎஸ், அண்ணாமலை அடுத்தடுத்து புகார்.. அதிரடியாக டெல்லி கிளம்பிய ஆளுநர் ரவி

வீண் விளம்பரம் தேடும் அதிமுக

தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், மக்கள் பிரச்சினையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.  

பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது.  ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது.  இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADMK : கடும் அமளி.. சட்டசபையில் இருந்து அதிமுக கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்.! சபாநாயாகர் அதிரடி அறிவிப்பு
 

click me!