
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி, 30ம் தேதி முடிவடைந்த்து. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளை சேர்ந்த 9,94,167 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வை எழுதினர்.
அதில், 4,98,383 மாணவர்களும், 4,85,784 மாணவிகளும், 39,741 தனி தேர்வர்களும் எழுதினர். இதேபோல் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வுக்கான முடிவை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு இதற்கான முடிவுகள் வெளியாகும்.
இணையதளத்தில் அறிந்து கொள்ள www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.bde2tn.nic.in ஆகிய தளங்களில் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.