
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து வேலைநிறுத்த போராட்டம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றுவந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தலைநகர் சென்னையில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் எம்,.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் தொழிற்சங்கத்தினர் தனியாக சென்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது என தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்
இதையடுத்து 2 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று இரவு முதலே ஊழியர்கள் வேலைக்குத் திருப்புகின்றனர்.
சென்னையில் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கத் தொடங்கின. இதனால் பணிகளுக்கு செல்வோர் பேருந்துகளில் வழக்கமான பயணத்தை தொடங்கினர்.
நிலுவைத் தொகை ரூ.1250 கோடியை தற்போது தற்காலை நிவாரணமாக வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து காலையில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 10 மணிக்கு மேல் தான் வழக்கமான வழித்தடங்களில் இயக்கக்கூடிய பேருந்துகள் இயங்கும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கத் தொடங்கிவிட்ட நிலையில் பணிகளுக்கு செல்வோர் பேருந்துகளில் வழக்கமான பயணத்தை தொடங்கினர்.