இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு… ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்!!

By Narendran SFirst Published Sep 15, 2022, 11:57 PM IST
Highlights

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் திமுக மற்றும் அமைச்சர்கள் மௌனம் காத்து வரும் நிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவினார். திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா கடந்த 6 ஆம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இதையும் படிங்க: வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு அளிக்கும் முதல் முத்தம்... மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து!!

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும் என்று இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்பி மகன் கைது..?

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்துக்களை தொடர்ந்து ஆ.ராசா விமர்சித்து வருவதாகவும் அவரை முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கி, கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே தனது கருத்து சர்ச்சையான நிலையில் ஆ.ராசா டிவிட்டர் பக்கத்தில், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது? அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!