இலங்கை மீனவர்கள் கைது – இந்திய கடற்படை பதிலடி...

Asianet News Tamil  
Published : Mar 07, 2017, 10:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
இலங்கை மீனவர்கள் கைது – இந்திய கடற்படை பதிலடி...

சுருக்கம்

srilanka fishermans arrest by indiyan navy

இந்திய கடற்பகுதிக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்ட நிலையில், இந்திய கடற்படையின் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெற்று இரவு 8 மணி அளவில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரின் படகின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ என்பவர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார்.

இதையடுத்து இலங்கை அரசின் அராஜக போக்கினை கண்டித்து தங்கச்சிமட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோடியக்கரை பகுதி அருகே இலங்கை மீனவர்கள் அத்துமீறி இந்திய கடற்பகுதி எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்திய கடற்படை கைது செய்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்க போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.! ஜனவரி 19 முதல் 5 நாட்களுக்கு.!