
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தை மீறியது இலங்கை அரசு எனவும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அதிமுக எம்.பிக்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இரவு 8 மணியளவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகள் மீது திடீர் துப்பாக்கிசூடு நடத்தினர்.
ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உங்களுடன் சேர்ந்து நாங்களும் இதில் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல முடிவுகள் வரும் என தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை பேசியதாவது.:
இந்தய அரசு தலையிட்டு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக மீனவர்களை சுட்டுகொள்ளக்கூடாது என ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புகொள்ளபட்டது.
ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு தமிழக மீனவரை சுட்டுக்கொன்றுள்ளதாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லையில் தான் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தம்பிதுறை தெரிவித்தார்.