தமிழக மீனவர் சுட்டுக்கொலை!! – இலங்கை கடற்படை மீது போலீசார் வழக்குப்பதிவு...

First Published Mar 7, 2017, 8:10 PM IST
Highlights
Indian fisherman killed !! - Navy case against ...


நடுகடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நேற்று திடீரென துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கொல்லப்பட்டார். இதையடுத்து இலங்கை கடற்படையின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெற்று இரவு 8 மணி அளவில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரின் படகின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ என்பவர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து மீனவர்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுட்டுகொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவுடன் கடலுக்குள் சென்ற மீனவர் அருள் கிளிண்டன் இலங்கை கடற்படை அத்துமீறி எந்த முன்னெச்சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இலங்கை கடற்படை மீது கொலை, கொலை முயற்சி, அத்துமீறி துப்பாக்கிசூடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

click me!